Friday, December 18, 2009

வாங்களேன், காலாற நடந்து பேசிக்கிட்டே போகலாம்..

"நீங்க இப்போ எங்க போறீங்க??" - யாரும் போகும் போது இப்படி கேள்விய கேட்டா இந்த கேள்விய கேட்க கூடாதுனு சின்ன வயசில இருந்தே (நிகழ்காலம்னே வெட்சுகலாமே..ஹிஹிஹி) மண்டைல கொட்டுவாங்க! மண்டைல கொட்டுனதாலோ என்னவோ இந்த மரமண்டைல இந்த கேள்வி மட்டும் ஏறிடுச்சு. சிலர் ஆபீஸ் போரேன்பாங்க, சிலர் வீட்டுக்கு, சிலர் கடைக்கு, இன்னும் சிலர் நமட்டு சிரிப்பு சிரிச்சிட்டு நகர்ந்து போயிருவாங்க.. யார் யார் என்னன்னவோ பதில தினுசு தினுசா சொன்னாலும் எனகென்னமோ மரணத்தை நோக்கி போறதாவே இருக்கும்.

நீங்க உங்க வாழ்க்கைய ஆரம்பிச்ச புள்ளிக்கு நேர் எதிர்பக்கம் உங்க மரணமும் பயணம் செய்ய தொடங்கியாச்சு. எப்போ சந்திக்க போறீங்கன்ற விஷயம் மட்டும் தான் மிச்சம்!! மரணம் - நம்மகிட்ட இருக்க ப்ரீபெய்டு கார்டு மாதிரி சார்.. இந்த ப்ரீபெய்டு குட்டி வாழ்க்கைக்குள்ள எவ்வளவு போராட்டம், பொறாமை,ஏக்கம், சந்தோசம், சிரிப்பு, துக்கம், காதல், கவிதை, குடும்பம், வேலை, வீடு, நண்பன், முகமறியா எதிரி, அன்பு, அழுகை, அறியாமை, ஏமாற்றம், பால்யம்,கருணை, துரோகம், இளமை, முதுமைனு - நிறைஞ்சு கிடக்கிற கண்ணாடி வளையல் நிறங்கள் மாதிரி அனுபவங்களை மாறி மாறி தானே கடந்து வருகிறோம்...
நம்மில் இருந்து விலகி தூரமா நின்னு யோசிச்சா.. 'எதுக்குடா இதல்லாம் பண்ணுனோம்?'னு கேள்வி எல்லாருக்கும் இருக்கும்.. என்னக்கும் இருக்கு.. !!

இந்த கேள்விக்கான விடைய தேடி அலையறத தவிர வாழ்க்கையோட சக பயணியா உங்ககிட்ட பேசறக்கும், பழகறக்கும், பகிரவும் நிறைய விஷயம் இருக்கு...
வாங்களேன், காலாற நடந்து பேசிக்கிட்டே போகலாம்.. !!!